செவ்வாய், 5 நவம்பர், 2013

ச! .....ரித்திரம் பேசுதடி ..

அடிப்படை வசதிகள்கூட  இல்லாத அந்த கிராமத்தில் நேற்றிரவு  தன் "ஆசன நுழைவாயிலில்" முண்டியது  தன் குடிகார கணவனின் 'குறியீடு' தவறா , அல்லது அது எதாவது "அரணை " யா ? என்று வெளிச்சம் இன்மையால் அறிய முடியாமல் போன அந்த கிராமத்து பெண்கள் காலை கடன்களை முடிக்க முள் புதர் மறைவிலும் காட்டு மரங்களுக்கு பின்னிலும் ஒதுங்கி , அவரவர் சக்திக்கு ஏற்ப முக்கி கொண்டிருந்தபோதுதான் அதை பார்த்தார்கள்......
வெறும் 460 கோடி செலவில் நாம் செவ்வாய் கிரகத்துக்கு செலுத்திய விண்கலம் , அங்கே மனிதர்கள் வாழும் சூழ்நிலை உள்ளதா  என்று அறியவேண்டி தீ பிழம்புகளுடன் வானில்  உயரே..உயரே... என்று பறந்து செல்ல ... "ஆகா !!! ஆச்சரியம் !!!!!அற்புதம்  என்று அவர்களின் "செவ்வாய்கள் (?) விரிய அந்த உணர்ச்சி வேகத்தில் அவர்கள் "கடமைகளும்' நிறைவு பெற்றது.... தங்கள் நாடு வல்லரசான சந்தோசத்தில் சுற்றி முற்றி ஒரு 'கல்' தேட ஆரம்பித்தார்கள் ... துடைப்பதற்கு !!!!!!!
...( ஒரு வல்லரசின் தரித்தரம் (சாரி ).... சரித்திரம் என்ற கல்வெட்டில் இருந்து...)

புரியாதவர்களுக்கு சிறு வயதில் எனக்கு ஒருவர் சொல்லி கொடுத்த ஒரு மலையாள கவிதை( எல்லோருக்கும் எளிதாக விளங்கும்)

" அரி மணி ஒண்ணு கொறிக் கானில்லா
தளிர் வளை இட்டு குலுக்கான் மோகம்..
கஸ்டிச்சு  ஒரு ஜாண் பறக்கும் கோழி
கருடனு ஒப்பம் பறக்கான் மோகம் !!!!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக