வியாழன், 15 ஆகஸ்ட், 2013

...காலை தொலைகாட்சியில் டில்லியில் ஒரு 'பொருளாதார மேதை (?) கொடியேற்றி தன இயலாமையை மறைக்க சப்பை கட்டு கட்டி கொண்டிருந்தார்
" பொருளாதார பின்னடைவு, சீர்கேடு மற்றும் சவால்கள் இந்த நாட்டில் மட்டும் இருப்பது அல்ல....   மேலும்  ......."( சாகபோகிற கிழவன் கம்பளிக்கு உள்ளிருந்து சுக்குத்தண்ணி கேப்பது போல ஒரு ஈனசுவரத்தில் ஒரு உரை..சை  )

இதுக்கு மேல் தாங்க முடியாமல் டீ கடைக்கு நடையை கட்டினேன்.. போகும் வழியில் ஒரு வீட்டுக்குள் இருந்து காட்டு கத்தலாக ஒரு பெண்மணியின் குரல் !!!

" வீட்டில்ல அரிசி பருப்பில்லை , பெத்த பிள்ளைகளுக்கு பால்கொடுக்க  வழியில்ல , கொண்டு வர காசு எதுக்குமே பாத்தாலே. எதாவது வருமானத்துக்கு வழி பண்ணுய்யானா , " அவன் வீட்டிலேயும் இதே மாதிரி கஷ்டம், இவன் வீட்டில்ல கஷ்டம், ஊரான் வீட்டில கஷ்டம் ன்னு வேதாந்தம் பேசறே !!
"தே ...... பயலே !!! நான் உன்கூட படுத்து புள்ளைய பெத்தான ..,,, இல்ல ஊரான் கூட படுத்து பெத்தனா ??அவன் கிட்ட போய் என் கஷ்டத்த  சொல்ல .....வக்கத்த நாயே.... நீயெல்லாம் ஒரு ஆம்பிள! உனக்கெல்லாம் ஒரு குடும்பம் ... த்தூ ..!!!!!

........நான் மெல்ல உள்ளே எட்டி பார்த்தேன்.... ஐயோ பாவம்  எந்த "பொருளாதார மேதை"யின்  வீடோ ?????


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக