வியாழன், 6 ஜூன், 2013

"என்னதை பார் ....யோகம் வரும் "

இன்று அதிகாலை வெறுப்பேற்ற கடவுளுக்கு வேறு யாரும் அகப்படவில்லை போலிருக்கு ......!!!.... காலையிலேயே ஒரு கஸ்டமர் பார்க்க டூ வீலரில் போய்கொண்டிருந்தேன்,, சத்தமே இல்லாமல் ஒரு பைக் சற்று மெதுவாகவே என்னை கடந்து சென்றது,, அதை தொடர்ந்து அதிவேகமாக கடந்து சென்ற பின்பற்றி ஒரு நாலைந்து பேர்.. தொட்டு விடும் தூரத்தில் ..தொடர்ந்து கொண்டே.....
முன்னால் சென்ற பைக் இல் ஒரு யுவன்-யுவதி... சற்று மாடர்ன் டைப் போல!... யார் வடிவமைத்த வாகனமோ தெரியவில்லை . ஆனால் வடிவமைத்தவன் ஏதோ ஒரு காலத்தில் மிருக ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவனாக இருந்திருப்பான்... அதன் சீட் அடடா ... மாடு மற்றும் குதிரைகள் சினை ஏற்றுவதற்கென்றே அதுகளுக்கு சவ்கர்யமான ஒரு சாய்மானத்தில் ஒரு மேடை போல கட்டி வைத்திருப்பார்கள் .. சிறு வயதில் பார்த்த ஞாபகம் ... அதே வடிவமைப்பு.... என்ன இரண்டு பக்கமும் இரண்டு கம்பிகள் தான் இல்லை !!!
...கற்பனை செய்து பாருங்கள்... ஒரு ஜீன்ஸ் அணிந்த பெண் அதுபோன்ற ஒரு நிலையில் உட்கார்தல்?... பிருஷ்டங்கள் பாதி பிறருக்கு தரிசனத்துக்கு ... ஒவ்வொரு பிரேக் அடிக்கும்போதும் மேலும் சில 'பின்னேற்றங்கள். அவள் ஜட்டிக்கு எலாஸ்டிக் செய்து கொடுத்தவன் நல்ல நாணயமான தொழில்காரன் போல.. அதுவும் முடிந்தவரை போராடி பார்கிறது....சை ... உரித்த கோழியை கடையில் தொங்க விட்டு இருப்பார்களே அதுதான் ஞாபகம் வந்தது.... 'பைல்ஸ் ' ஆபரேசன் செய்து கொள்பவன் கூட டாக்டருக்கு இப்படி தூக்கி காட்டி இருக்க மாட்டன் ....
அவனோ தேர்தலில் வேட்பாளர் தமது சின்னத்தை வாகனத்தில் வைத்து ஒட்டு சேகரிப்பது போல இதே போஸில் ஊர்வலம் நடத்துகிறான்... .. இன்னைக்கு போற வேலை உருப்படுமா ???குடிக்க கஞ்சியாவது கிடைக்குமா ...... கவலையுடன் நான் ......!!!!!
... எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் ???( ஹி ...ஹி இந்த பினிஷிங் டச் இல்லேனா எப்படி..!!!!) ,

'கருச்சிதைவுகள் '"

ஒரு மாங்காயை நாசுக்காக ,நாகரிகமாக வெட்டி தின்ன கற்றுகொள்ளாத இனிய சிறுவயது பருவம். சக சிறுவர்களுடன் ஆளுக்கொரு மாங்காயை அதன் புளிப்பை ரசித்து எச்சில் ஒழுக தின்றுவிட்டு அதன் கொட்டையை வாய்க்கால் ஒரமாக நட்டுவைதோம்... பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் முளைத்துவிட்டதா என்று தினமும் ஒரு ஆர்வம் ... கடைசியில் நட்டுவைத்த ஆறு கொட்டைகளில் மூன்று முளைத்து விட்டது... ஒவ்வொருநாளும் அதனை பார்க்காமல் பள்ளிக்கு சென்றதே இல்லை... ஒரு நாள் அதன் கொழுந்து இலையை கில்லி வாசம் பார்த்துக்கொண்டோம்... " யே இங்க பாருடா மாங்க வாசம் இப்போவ அடிக்குது "...

..... இன்று சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முன்புறம் குவித்து வைக்கபட்டிருந்த குப்பையில் ஒரு ஆறோ ஏழோ மாங்கொட்டைகள் சிதறி கிடந்தன.. பழைய ஞாபகங்கள் .....அவற்றை பார்க்கவே பரிதாபமாக இருந்தது..மண்ணின் வாசனை போலும் இல்லாத தார் சாலையில் கிடந்து இளைப்பாற கூட அவற்றுக்கு கொடுத்து வைக்கவில்லை .. பார்த்து கொண்டிருக்கும்போதே குப்பை லாரி வந்து அவற்றை அள்ளி சென்று விட்டது.. இனி அவற்றின் கதி?.... ஒரு குப்பை கிடங்கில் ஒட்டுமொத்த குப்பைகளுடன் தீயில் இடப்டுவது தான ??......தானும் ஒரு மரமாக மாறி கனி கொடுக்கும் சந்தர்ப்பம் இவைகளுக்கு அமையபோவதே இல்லையா????

இரண்டாவதோ மூன்றாவதோ பிள்ளையாக பிறக்கும் போதே,.. தன் தொப்புள் கொடி உதிரும் முன் தன் தாயை அறுவை சிகிச்சையால் மலடாக மாற்றி அமைக்கும் இந்த சமுதாய மாற்றத்தில் மாங்கொட்டைகளை பற்றி கலைப்பட யாருக்கு நேரம் இருக்கிறது?...................மனிதன் சுயநலத்தின் உச்சாணி கொம்பில் வீற்று இருக்கிறான்...தன்னை தாங்கி பிடித்த அத்தனை கொம்புகளையும் வெட்டிவிட்டு...!!!