வியாழன், 6 ஜூன், 2013

'கருச்சிதைவுகள் '"

ஒரு மாங்காயை நாசுக்காக ,நாகரிகமாக வெட்டி தின்ன கற்றுகொள்ளாத இனிய சிறுவயது பருவம். சக சிறுவர்களுடன் ஆளுக்கொரு மாங்காயை அதன் புளிப்பை ரசித்து எச்சில் ஒழுக தின்றுவிட்டு அதன் கொட்டையை வாய்க்கால் ஒரமாக நட்டுவைதோம்... பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் முளைத்துவிட்டதா என்று தினமும் ஒரு ஆர்வம் ... கடைசியில் நட்டுவைத்த ஆறு கொட்டைகளில் மூன்று முளைத்து விட்டது... ஒவ்வொருநாளும் அதனை பார்க்காமல் பள்ளிக்கு சென்றதே இல்லை... ஒரு நாள் அதன் கொழுந்து இலையை கில்லி வாசம் பார்த்துக்கொண்டோம்... " யே இங்க பாருடா மாங்க வாசம் இப்போவ அடிக்குது "...

..... இன்று சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முன்புறம் குவித்து வைக்கபட்டிருந்த குப்பையில் ஒரு ஆறோ ஏழோ மாங்கொட்டைகள் சிதறி கிடந்தன.. பழைய ஞாபகங்கள் .....அவற்றை பார்க்கவே பரிதாபமாக இருந்தது..மண்ணின் வாசனை போலும் இல்லாத தார் சாலையில் கிடந்து இளைப்பாற கூட அவற்றுக்கு கொடுத்து வைக்கவில்லை .. பார்த்து கொண்டிருக்கும்போதே குப்பை லாரி வந்து அவற்றை அள்ளி சென்று விட்டது.. இனி அவற்றின் கதி?.... ஒரு குப்பை கிடங்கில் ஒட்டுமொத்த குப்பைகளுடன் தீயில் இடப்டுவது தான ??......தானும் ஒரு மரமாக மாறி கனி கொடுக்கும் சந்தர்ப்பம் இவைகளுக்கு அமையபோவதே இல்லையா????

இரண்டாவதோ மூன்றாவதோ பிள்ளையாக பிறக்கும் போதே,.. தன் தொப்புள் கொடி உதிரும் முன் தன் தாயை அறுவை சிகிச்சையால் மலடாக மாற்றி அமைக்கும் இந்த சமுதாய மாற்றத்தில் மாங்கொட்டைகளை பற்றி கலைப்பட யாருக்கு நேரம் இருக்கிறது?...................மனிதன் சுயநலத்தின் உச்சாணி கொம்பில் வீற்று இருக்கிறான்...தன்னை தாங்கி பிடித்த அத்தனை கொம்புகளையும் வெட்டிவிட்டு...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக