சனி, 8 பிப்ரவரி, 2014

சென்னையில் ஒரு பள்ளிக்கூடம், இரண்டு மாணவர்களுக்கு தர்ம பூசை விழுந்துகொண்டிருந்தது ... காரணம் வேறு ஒன்றுமில்லை . அதில் ஒருவன் அதே வகுப்பில் படிக்கும் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்ல , அதை கேட்ட மற்றவன் அதை அப்படியே ஆசிரியை இடம் சொல்ல .." அந்த 'காதல்' என்ற வார்த்தை எப்படிடா  உங்க வாயில வரலாம் என்று  மாணவர்களை வகுப்பு அறைக்கு வெளியில் முழங்கால் படி போடா சொல்லி தண்டனை....இந்த 'கலாச்சார கேட்டுக்கு  காரணமான அந்த மாணவர்களுக்கு 'கலாச்சார காவல் ஆசிரியை ' அவ்வப்போது வெளியில் வந்து தவணை முறையில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.....

....
.....
பின் குறிப்பு " மேலே குறிப்பிட்ட மாணவர்களும் "இரண்டாம் " வகுப்பில் பயில்பவர்கள்.... சபாஷ் நல்ல (?) ஆசிரியை.!!!! .

செவ்வாய், 5 நவம்பர், 2013

ச! .....ரித்திரம் பேசுதடி ..

அடிப்படை வசதிகள்கூட  இல்லாத அந்த கிராமத்தில் நேற்றிரவு  தன் "ஆசன நுழைவாயிலில்" முண்டியது  தன் குடிகார கணவனின் 'குறியீடு' தவறா , அல்லது அது எதாவது "அரணை " யா ? என்று வெளிச்சம் இன்மையால் அறிய முடியாமல் போன அந்த கிராமத்து பெண்கள் காலை கடன்களை முடிக்க முள் புதர் மறைவிலும் காட்டு மரங்களுக்கு பின்னிலும் ஒதுங்கி , அவரவர் சக்திக்கு ஏற்ப முக்கி கொண்டிருந்தபோதுதான் அதை பார்த்தார்கள்......
வெறும் 460 கோடி செலவில் நாம் செவ்வாய் கிரகத்துக்கு செலுத்திய விண்கலம் , அங்கே மனிதர்கள் வாழும் சூழ்நிலை உள்ளதா  என்று அறியவேண்டி தீ பிழம்புகளுடன் வானில்  உயரே..உயரே... என்று பறந்து செல்ல ... "ஆகா !!! ஆச்சரியம் !!!!!அற்புதம்  என்று அவர்களின் "செவ்வாய்கள் (?) விரிய அந்த உணர்ச்சி வேகத்தில் அவர்கள் "கடமைகளும்' நிறைவு பெற்றது.... தங்கள் நாடு வல்லரசான சந்தோசத்தில் சுற்றி முற்றி ஒரு 'கல்' தேட ஆரம்பித்தார்கள் ... துடைப்பதற்கு !!!!!!!
...( ஒரு வல்லரசின் தரித்தரம் (சாரி ).... சரித்திரம் என்ற கல்வெட்டில் இருந்து...)

புரியாதவர்களுக்கு சிறு வயதில் எனக்கு ஒருவர் சொல்லி கொடுத்த ஒரு மலையாள கவிதை( எல்லோருக்கும் எளிதாக விளங்கும்)

" அரி மணி ஒண்ணு கொறிக் கானில்லா
தளிர் வளை இட்டு குலுக்கான் மோகம்..
கஸ்டிச்சு  ஒரு ஜாண் பறக்கும் கோழி
கருடனு ஒப்பம் பறக்கான் மோகம் !!!!

 

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சுதந்திர விழா பேரணியில் நம்முடைய 'முப்படை ' அணிவகுப்பை பார்த்தால் ..." இப்படை தோற்கின் எப்படை வெல்லும் " என்று எண்ண தோன்றுகிறது... நாட்டின் கல்விக்கு  ஒதுக்கும் நிதியின் அளவை விட அதிகமாக வருடா வருடம் கபளீரம் செய்து அயல் நாட்களிடம் இருந்து வாங்கி வாய்த்த இவைகளால் நாட்டின் எந்த மூலையிளிருந்தும் எந்த எதிரிகளும் ஊடுருவதை தடுக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.....

ஆனால் ...!!!. டேய் முட்டா பயலுகளா , எதிரிகள்  இந்த நாட்டுக்கு எதிராக ஒட்டி  வரும் டாங்கிகளும், பீரங்கிகளும் , , போர் படை விமானங்களும் உங்கள் கண்ணுக்கு சிக்க போவதே இல்லை ...ஏன் தெரியுமா ???/
அவைகளின் பெயரே  வேற ...
1.மொன்சாண்டோ,போஸ்கோ,ஹுவாய் ,வால்மார்ட், போர்ட் ,ஹயுண்டாய் , சி .என் ..என். ஸ்கை , ஒனிக்ஸ் ,இன்னும்,...இன்னும்..பன்னாட்டு கம்பெனிகள் என்ற போர்வையில் வரும்   அவர்களுக்கு ஆதரவாக உள்நாட்டு ஒற்றகளாக இந்நாட்டின் 'நிதி'களும் , 'மதி'களும் .. !
... ஒரு கவிஞன் சொன்னதைப்போல 'நீ இந்த பட்டு கோவணத்தை பற்றி கனவுகண்டு கொண்டிரு , உன் இடுப்பில் இருக்கும் ஒற்றை கோவணமும் களவு போகும்.!!!!!
அய்யா மனசாட்சியுள்ள இராணுவ ஜவான்களே , சுதந்திர அணிவகுப்பில் , இந்த தேசத்தின் ஒட்டுமொத்த தலைவர்கள் இருக்கும் பகுதிக்கு வரும்போது, இந்த முறை அத்தனை பீரங்கிகளையும் , ராக்கெட்டையும் அவர்களை குறிவைத்து இயக்கிவிடுங்கள்.....
"இந்தியாவுக்கு கண்டிப்பாக 'சுதந்திரம் ' கிடைத்துவிடும்.!!!!!
...காலை தொலைகாட்சியில் டில்லியில் ஒரு 'பொருளாதார மேதை (?) கொடியேற்றி தன இயலாமையை மறைக்க சப்பை கட்டு கட்டி கொண்டிருந்தார்
" பொருளாதார பின்னடைவு, சீர்கேடு மற்றும் சவால்கள் இந்த நாட்டில் மட்டும் இருப்பது அல்ல....   மேலும்  ......."( சாகபோகிற கிழவன் கம்பளிக்கு உள்ளிருந்து சுக்குத்தண்ணி கேப்பது போல ஒரு ஈனசுவரத்தில் ஒரு உரை..சை  )

இதுக்கு மேல் தாங்க முடியாமல் டீ கடைக்கு நடையை கட்டினேன்.. போகும் வழியில் ஒரு வீட்டுக்குள் இருந்து காட்டு கத்தலாக ஒரு பெண்மணியின் குரல் !!!

" வீட்டில்ல அரிசி பருப்பில்லை , பெத்த பிள்ளைகளுக்கு பால்கொடுக்க  வழியில்ல , கொண்டு வர காசு எதுக்குமே பாத்தாலே. எதாவது வருமானத்துக்கு வழி பண்ணுய்யானா , " அவன் வீட்டிலேயும் இதே மாதிரி கஷ்டம், இவன் வீட்டில்ல கஷ்டம், ஊரான் வீட்டில கஷ்டம் ன்னு வேதாந்தம் பேசறே !!
"தே ...... பயலே !!! நான் உன்கூட படுத்து புள்ளைய பெத்தான ..,,, இல்ல ஊரான் கூட படுத்து பெத்தனா ??அவன் கிட்ட போய் என் கஷ்டத்த  சொல்ல .....வக்கத்த நாயே.... நீயெல்லாம் ஒரு ஆம்பிள! உனக்கெல்லாம் ஒரு குடும்பம் ... த்தூ ..!!!!!

........நான் மெல்ல உள்ளே எட்டி பார்த்தேன்.... ஐயோ பாவம்  எந்த "பொருளாதார மேதை"யின்  வீடோ ?????


வியாழன், 6 ஜூன், 2013

"என்னதை பார் ....யோகம் வரும் "

இன்று அதிகாலை வெறுப்பேற்ற கடவுளுக்கு வேறு யாரும் அகப்படவில்லை போலிருக்கு ......!!!.... காலையிலேயே ஒரு கஸ்டமர் பார்க்க டூ வீலரில் போய்கொண்டிருந்தேன்,, சத்தமே இல்லாமல் ஒரு பைக் சற்று மெதுவாகவே என்னை கடந்து சென்றது,, அதை தொடர்ந்து அதிவேகமாக கடந்து சென்ற பின்பற்றி ஒரு நாலைந்து பேர்.. தொட்டு விடும் தூரத்தில் ..தொடர்ந்து கொண்டே.....
முன்னால் சென்ற பைக் இல் ஒரு யுவன்-யுவதி... சற்று மாடர்ன் டைப் போல!... யார் வடிவமைத்த வாகனமோ தெரியவில்லை . ஆனால் வடிவமைத்தவன் ஏதோ ஒரு காலத்தில் மிருக ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவனாக இருந்திருப்பான்... அதன் சீட் அடடா ... மாடு மற்றும் குதிரைகள் சினை ஏற்றுவதற்கென்றே அதுகளுக்கு சவ்கர்யமான ஒரு சாய்மானத்தில் ஒரு மேடை போல கட்டி வைத்திருப்பார்கள் .. சிறு வயதில் பார்த்த ஞாபகம் ... அதே வடிவமைப்பு.... என்ன இரண்டு பக்கமும் இரண்டு கம்பிகள் தான் இல்லை !!!
...கற்பனை செய்து பாருங்கள்... ஒரு ஜீன்ஸ் அணிந்த பெண் அதுபோன்ற ஒரு நிலையில் உட்கார்தல்?... பிருஷ்டங்கள் பாதி பிறருக்கு தரிசனத்துக்கு ... ஒவ்வொரு பிரேக் அடிக்கும்போதும் மேலும் சில 'பின்னேற்றங்கள். அவள் ஜட்டிக்கு எலாஸ்டிக் செய்து கொடுத்தவன் நல்ல நாணயமான தொழில்காரன் போல.. அதுவும் முடிந்தவரை போராடி பார்கிறது....சை ... உரித்த கோழியை கடையில் தொங்க விட்டு இருப்பார்களே அதுதான் ஞாபகம் வந்தது.... 'பைல்ஸ் ' ஆபரேசன் செய்து கொள்பவன் கூட டாக்டருக்கு இப்படி தூக்கி காட்டி இருக்க மாட்டன் ....
அவனோ தேர்தலில் வேட்பாளர் தமது சின்னத்தை வாகனத்தில் வைத்து ஒட்டு சேகரிப்பது போல இதே போஸில் ஊர்வலம் நடத்துகிறான்... .. இன்னைக்கு போற வேலை உருப்படுமா ???குடிக்க கஞ்சியாவது கிடைக்குமா ...... கவலையுடன் நான் ......!!!!!
... எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் ???( ஹி ...ஹி இந்த பினிஷிங் டச் இல்லேனா எப்படி..!!!!) ,

'கருச்சிதைவுகள் '"

ஒரு மாங்காயை நாசுக்காக ,நாகரிகமாக வெட்டி தின்ன கற்றுகொள்ளாத இனிய சிறுவயது பருவம். சக சிறுவர்களுடன் ஆளுக்கொரு மாங்காயை அதன் புளிப்பை ரசித்து எச்சில் ஒழுக தின்றுவிட்டு அதன் கொட்டையை வாய்க்கால் ஒரமாக நட்டுவைதோம்... பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் முளைத்துவிட்டதா என்று தினமும் ஒரு ஆர்வம் ... கடைசியில் நட்டுவைத்த ஆறு கொட்டைகளில் மூன்று முளைத்து விட்டது... ஒவ்வொருநாளும் அதனை பார்க்காமல் பள்ளிக்கு சென்றதே இல்லை... ஒரு நாள் அதன் கொழுந்து இலையை கில்லி வாசம் பார்த்துக்கொண்டோம்... " யே இங்க பாருடா மாங்க வாசம் இப்போவ அடிக்குது "...

..... இன்று சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முன்புறம் குவித்து வைக்கபட்டிருந்த குப்பையில் ஒரு ஆறோ ஏழோ மாங்கொட்டைகள் சிதறி கிடந்தன.. பழைய ஞாபகங்கள் .....அவற்றை பார்க்கவே பரிதாபமாக இருந்தது..மண்ணின் வாசனை போலும் இல்லாத தார் சாலையில் கிடந்து இளைப்பாற கூட அவற்றுக்கு கொடுத்து வைக்கவில்லை .. பார்த்து கொண்டிருக்கும்போதே குப்பை லாரி வந்து அவற்றை அள்ளி சென்று விட்டது.. இனி அவற்றின் கதி?.... ஒரு குப்பை கிடங்கில் ஒட்டுமொத்த குப்பைகளுடன் தீயில் இடப்டுவது தான ??......தானும் ஒரு மரமாக மாறி கனி கொடுக்கும் சந்தர்ப்பம் இவைகளுக்கு அமையபோவதே இல்லையா????

இரண்டாவதோ மூன்றாவதோ பிள்ளையாக பிறக்கும் போதே,.. தன் தொப்புள் கொடி உதிரும் முன் தன் தாயை அறுவை சிகிச்சையால் மலடாக மாற்றி அமைக்கும் இந்த சமுதாய மாற்றத்தில் மாங்கொட்டைகளை பற்றி கலைப்பட யாருக்கு நேரம் இருக்கிறது?...................மனிதன் சுயநலத்தின் உச்சாணி கொம்பில் வீற்று இருக்கிறான்...தன்னை தாங்கி பிடித்த அத்தனை கொம்புகளையும் வெட்டிவிட்டு...!!!

செவ்வாய், 28 மே, 2013

பத்தாம் வகுப்பு ஸ்பெஷல் ......

...... நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நடந்த சம்பவம்.. எங்கள் தமிழ் ஆசிரியர் வகுப்பறையில் நுழையும்போது நாங்கள் எல்லோரும் எழுந்து நின்று 'வணக்கம் சார்' என்று விஷ் பண்ணுவது முறையாக நடப்பது .. அதில் சில மாணவர்களுக்கு எழுந்து நிற்க கூட சோம்பல் .. அவர் வரும்போது சம்ப்ரதயமாக லைட்டாக தங்கள் பின்பக்கத்தை மட்டும் சற்றே உயர்த்தி வணக்கம் சொல்லி அமர்ந்து விடுவார்கள்... நாள் ஆக .ஆக இவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது..... 
ஒரு நாள் ஆசிரியர் வந்தார் ... எல்லோரும் வணக்கம் சொன்னவுடன் உடனே அமரசொல்பவர் அன்று சற்று காலம் தாழ்த்தினார் .... பெரும்பாலோர் எழுந்து நின்று கொண்டிருக்க நான் மேற்சொன்ன நபர்கள் மட்டும் கைகளை மேஜை மேல் ஊன்றி தங்கள் புட்டத்தை மட்டும் சற்றே உயர்த்தியவாறு ஒரு வித்தியாசமான கோணத்தில் நின்றுகொண்டிருந்தார்கள் ....
.
.. இவர் உடனே ....." சில எருமை மாடுகள் உட்கார்ந்து கொண்டே சாணி போடுகின்றன "... .......நாங்கள் உடனே அவர்களை திரும்பி பார்த்தோம் .. இவர் சொன்ன வாக்கியமும் அவர்கள் நின்ற கோலமும்.ஏறக்குறைய ஒரே போல இருந்தது ... வகுப்பெங்கும் சிரிப்பொலி....பின்பு அவரே தொடர்ந்தார் " இந்த எருமை மாடுகளுக்கு மட்டும் தான் இந்த விசயத்துக்கு எழுந்திரிக்க கூட சோம்பல் ..... 
இது நடந்து பல வருடங்கள் ஆனாலும் 'ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற / மக்களவை கூட்டங்களில் நம் மேதகு 'உறுபினர்களை' பார்க்கும்போதெல்லாம் இது ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது...!!!!(" சில எருமை மாடுகள் உட்கார்ந்து கொண்டே சாணி போடுகின்றன ".)......