செவ்வாய், 28 மே, 2013

பத்தாம் வகுப்பு ஸ்பெஷல் ......

...... நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நடந்த சம்பவம்.. எங்கள் தமிழ் ஆசிரியர் வகுப்பறையில் நுழையும்போது நாங்கள் எல்லோரும் எழுந்து நின்று 'வணக்கம் சார்' என்று விஷ் பண்ணுவது முறையாக நடப்பது .. அதில் சில மாணவர்களுக்கு எழுந்து நிற்க கூட சோம்பல் .. அவர் வரும்போது சம்ப்ரதயமாக லைட்டாக தங்கள் பின்பக்கத்தை மட்டும் சற்றே உயர்த்தி வணக்கம் சொல்லி அமர்ந்து விடுவார்கள்... நாள் ஆக .ஆக இவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது..... 
ஒரு நாள் ஆசிரியர் வந்தார் ... எல்லோரும் வணக்கம் சொன்னவுடன் உடனே அமரசொல்பவர் அன்று சற்று காலம் தாழ்த்தினார் .... பெரும்பாலோர் எழுந்து நின்று கொண்டிருக்க நான் மேற்சொன்ன நபர்கள் மட்டும் கைகளை மேஜை மேல் ஊன்றி தங்கள் புட்டத்தை மட்டும் சற்றே உயர்த்தியவாறு ஒரு வித்தியாசமான கோணத்தில் நின்றுகொண்டிருந்தார்கள் ....
.
.. இவர் உடனே ....." சில எருமை மாடுகள் உட்கார்ந்து கொண்டே சாணி போடுகின்றன "... .......நாங்கள் உடனே அவர்களை திரும்பி பார்த்தோம் .. இவர் சொன்ன வாக்கியமும் அவர்கள் நின்ற கோலமும்.ஏறக்குறைய ஒரே போல இருந்தது ... வகுப்பெங்கும் சிரிப்பொலி....பின்பு அவரே தொடர்ந்தார் " இந்த எருமை மாடுகளுக்கு மட்டும் தான் இந்த விசயத்துக்கு எழுந்திரிக்க கூட சோம்பல் ..... 
இது நடந்து பல வருடங்கள் ஆனாலும் 'ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற / மக்களவை கூட்டங்களில் நம் மேதகு 'உறுபினர்களை' பார்க்கும்போதெல்லாம் இது ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது...!!!!(" சில எருமை மாடுகள் உட்கார்ந்து கொண்டே சாணி போடுகின்றன ".)......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக